பண்பாட்டுப் பொருட்கள், நினைவுச் சின்னங்கள், களங்கள் - noolahamfoundation/project-proposals GitHub Wiki

பொதுவாக "மரபுரிமை" (Heritage) இரண்டு வகைகளாகப் பார்க்கப்படுகிறது;

  • 1. இயற்கை மரபுரிமை (Natural heritage) - மனிதரின் தாக்கங்களுக்கு உட்படாதது.
  • 2. பண்பாட்டு மரபுரிமை (Cultural heritage) - மனிதரின் தாக்கங்களுக்கு உட்பட்டது.
நீங்கள் எடுத்துக்காட்டியபடி இரண்டுமே பெரிய துறைகள் தான். இவற்றுள்ளும் "பண்பாட்டு மரபுரிமை" மிகவும் சிக்கல்தன்மை கொண்டது. பல துறைகள் சார்ந்த பரிமாணம் இதற்கு உண்டு. பண்பாட்டு மரபுரிமை இருவகைப்படுகின்றது;
  • 1. தொடுபுலனாகு மரபுரிமை (Tangible heritage)
  • 2. தொடுபுலனாகா மரபுரிமை (Intangible heritage)
இவற்றில் ஆய்வுகளுக்கான ஏராளமான வாய்ப்புக்களும், தேவைகளும் உள்ளன. இவற்றுட் சில அம்சங்களில் ஆய்வுகள் போதிய அளவு முன்னெடுக்கப்படுகின்றன (எ.கா: நிகழ்த்து கலைகள்). வேறு சில அம்சங்கள் குறித்து மிகக் குறைவான ஆய்வுகளே மேற்கொள்ளப்படுகின்றன (எ.கா: பொருட் பண்பாடு). உலக அளவிலேயே இத்துறைகள் தொடர்பான ஆய்வுகள் போதிய அளவு வளர்ச்சியடையாத நிலையில், இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களைப் பற்றிய ஆய்வுகள் குறித்துச் சொல்லவேண்டியது இல்லை. எனவே நமது சமூகம் குறித்து முறையான இத்தகைய ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதற்கு நாம் நீண்ட காலம் காத்திருக்கவேண்டி ஏற்படலாம். இதனாற்றான், இவை சார்ந்த தகவல்களை இழந்துவிடாமல் இருக்க இத்துறை தொடர்பில் தற்காலத்தில் கிடைக்கக்கூடிய தகவல்களை ஆவணப்படுத்தி வைத்தல் முக்கியத்துவம் பெறுகிறது. எழுத்துமூல ஆவணங்களை ஆவணப்படுத்துவதற்கும், பிற பண்பாட்டு அல்லது இயற்கை அம்சங்களை ஆவணப்படுத்துவதற்கும் உரிய வேறுபாடுகளை உணர்ந்துகொள்வது அவசியம். ஒரு நூலையோ அல்லது ஒரு கல்வெட்டையோ ஆவணப்படுத்துவதற்கு அவற்றை எண்ணிமமாக்கிப் பாதுகாப்பது பெருமளவுக்குப் போதுமானது. ஏனெனில் அவற்றில் உள்ள தகவல்களை நேரடியாக வாசித்து அறிந்துகொள்ள நம்மால் முடியும். ஆனால், ஒரு புழங்கு பொருளிலோ, கட்டிடம் ஒன்றிலோ, பிற பண்பாட்டுப் பொருட்களிலோ பொதிந்துள்ள தகவல்களை நேரடியாக வாசித்து அறிய முடியாது. எடுத்துக்காட்டாக ஒரு புழங்கு பொருளை எடுத்துக்கொண்டால், அது என்ன பொருளால் செய்யப்பட்டது, அதன் மேற்பரப்பு எப்படிப்பட்டது, அதன் அளவுகள், அப்பொருளோடு தொடர்புடைய பிற பொருட்கள் போன்ற பல்வேறு அம்சங்களூடாகவே அப்பொருள் குறித்தும், பயன்பட்ட தொழில்நுட்பம் குறித்தும், அதை உருவாக்கிப் பயன்படுத்திய சமுதாயத்தைக் குறித்தும் நாம் அறிந்து கொள்ள முடியும். எனவே ஒரு பொருளை ஆவணப்படுத்தும்போது அதன் என்னென்ன அம்சங்களை எவ்வாறு ஆவணப்படுத்துகிறோம் என்பது முக்கியமானது.

இயற்கை மரபுரிமை தொடர்பில் தாவரங்கள் தொடர்பிலான ஆவணப்படுத்தலில் தாவரவியல் முறைகளைக் கவனத்தில் கொள்லலாம். குறிப்பாக, ஒரு தாவரத்தின் முழு வடிவம், கிளைகள் பொருந்தும் விதம், இலைகள், பூக்கள், காய்கள், தண்டு, பட்டை, வேர் போன்றவற்றைத் தெளிவாகக் காட்டும் விதத்தில் ஒரு தொகுதியாக ஒளிப்படங்களை ஆவணப்படுத்தலாம்.

இயற்கை அம்சங்களுக்கும், பண்பாட்டு அம்சங்களுக்கும் இடையிலும் தொடர்புகள் உள்ளன. ஒன்றையொன்று சார்ந்து மாற்றங்களும் ஏற்படுகின்றன. இது தொடர்பில் ஒரு விடயத்தை எடுத்துக்காட்டலாம். "முள்முருக்கு" எனப்படும் மரம் குறித்து நாம் அறிவோம். திருமணச் சடங்குகளில் இதற்கு முக்கியத்துவம் உண்டு. முட்கள் நிறைந்து காணப்படும் இதன் தண்டை, பிறன் மனை நாடி முனிவரிடம் உடலில் ஆயிரம் கண் தோன்றச் சாபம் பெற்ற இந்திரனின் குறியீடாகக் கொள்வர். சடங்கு முடிந்த பின்னர் இக்கிளை வீட்டில் நட்டு வளர்க்கப்படும். இதனால், யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான வீடுகளில் இம்முள்முருக்க மரம் தலைமுறை தலைமுறையாகக் காணப்படும். ஆனால், அண்மையில் நோய் ஏற்பட்டு இத்தாவரம் யாழ்ப்பாணத்தில் ஏறத்தாழ அழிந்துபோய் விட்டது. இது நமது திருமணச் சடங்குகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறானவற்றை வெளிப்படுத்தும் விதத்திலும் ஆவணமாக்கம் அமையமுடியும்.

எனவே மரபுரிமை ஆவணமாக்கம் தொடர்பில் போதிய திட்டமிடல் அவசியம். CCO ( http://cco.vrafoundation.org/index.php/toolkit/cco_pdf_version/ ) வழிகாட்டியில் உள்ள தகவல்கள் அடிப்படையாக அமையக்கூடும்.

Standards

பண்பாட்டுப் பொருட்களை ஆவணப்படுத்தல் தொடர்பாக சீர்தரங்கள் உண்டு. இவை அண்மைக் காலமாகவே உருப்பெற்று வருகின்றன. எ.கா: http://cco.vrafoundation.org/, https://en.wikipedia.org/wiki/Cultural_Objects_Name_Authority. ஆனால் இவை தொடர்பாக எமது விளக்கம் தற்போது குறைவாகவே உள்ளது. Cultural Object என்பது Sites and Monuments (https://en.wikipedia.org/wiki/Sites_and_monuments_record) என்பதனை உள்ளடக்கியது. பண்பாட்டுப் பொருள் (Cultural Object), Cultural Site, Monument என்பவை எல்லாம் தொடர்புடையவை.

Cultural Heritage ம் Natural Heritage உம் பொதுவாக இணைந்தே அணுகப்படுகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

வரையறைகள்

"A cultural object is an object made by humans for a practical and/or spiritual purpose." https://australianmuseum.net.au/what-is-a-cultural-object

"Cultural monuments are: immovable and movable objects, groups of objects and ensembles of historical, archaeological, artistic, aesthetic, ethnologic, architectural,urban, social, technical and other scientific and cultural values important for history and culture of the Country A." "According to the characteristics, monuments can be: archaeological, historical,architectural, artistic, construction, ethnologic, technical, as well as old and rare book and film material."

http://www.unesco.org/culture/natlaws/media/pdf/montenegro/me_protcultmonts_engtof.pdf http://www.getty.edu/conservation/publications_resources/newsletters/14_3/feature1_4.html

"Cultural heritage often brings to mind artifacts (paintings, drawings, prints, mosaics, sculptures), historical monuments and buildings, as well as archaeological sites. But the concept of cultural heritage is even wider than that, and has gradually grown to include all evidence of human creativity and expression: photographs, documents, books and manuscripts, and instruments, etc. either as individual objects or as collections. Today, towns, underwater heritage, and the natural environment are also considered part of cultural heritage since communities identify themselves with the natural landscape." https://www.khanacademy.org/humanities/art-history-basics/beginners-art-history/a/what-is-cultural-heritage http://archives.icom.museum/objectid/heritage/intro2.html

The terms are used interchangeably.

சிக்கல்கள்

When it comes to cultural objects, we of course have many issues:

  • What is a cultural object?
  • Whose cultural object?
  • Colonization etc.
  • Cultural Appropriation
⚠️ **GitHub.com Fallback** ⚠️