தொழிற்கலைகளை ஆவணப்படுத்தல் செயற்திட்டம் - noolahamfoundation/project-proposals GitHub Wiki

ஆவண நோக்கம்: செயற்திட்ட வரைவிலக்கணம் (Project Definition/Charter)

ஆவண வரலாறு: வரைவு 1.0 - ஒக்ரோபர் 17, 2012
சிறு திருத்தம் - ஒக்ரோபர் 28, 2012
இற்றை - நவம்பர் 8, 2013

நோக்கங்கள்: Objective 1.3 - Traditional Science and Technology

பிற ஆவணங்கள்: Traditional Crafts and Trades - References

Table of Contents

பொருளடக்கம்

  1. பின்புலம் - Background/Intro
  2. சிக்கல்களும் வாய்ப்புக்களும் - Problems and Opportunities
  3. இலக்குகள் - Goals and Objectives
  4. செயற்பரப்பு - Scope
  5. முக்கிய பங்குத்தாரர்கள் - Key Stakeholders
  6. வெற்றி அளவீடுகள் - Outcomes/Success Criteria
  7. தற்கோள்களும் கட்டுப்பாடுகளும் - Assumptions and Constraints
  8. இடர்கள் - Risks
  9. மதிப்பீட்டுச் செலவுகளும் வளங்களும் - Estimated Costs and Resources
  10. மதிப்பீட்டு காலம் - Estimated Duration
  11. உசாத்துணைகள் - References
  12. கலைச்சொற்கள் - Technical Terms

பின்புலம் - Background/Intro

ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கு தொழிற்கலைகள் அடித்தளக் கூறிகளில் ஒன்றாகும். வேளாண்மை, மீன்பிடிப்பு, நெசவு, கட்டுமானத் தொழில்நுட்பம், மரவேலை, மண்பாண்டக்கலை, கைத்தொழில்கள் என விரியும் எமது தொழிற்கலைகள் இன்றும் பெரும்பானமையினரின் வாழ்வாதாரமாக அமைபவை. எனினும் எமது சமூகத்தில் பல தொழிற்கலைகள் சாதியமயப்படுத்தப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு அவற்றில் புதைந்து இருக்கும் நுட்பமும் அறிவும் மதிக்கப்பட்டாமலும் காக்கப்படாமலும் ஆவணப்படுத்தப்படாமலும் போய்விட்டன.

மண்வீடு, கட்டுமரம் எப்படிக் கட்டுவது என்பதில் இருந்து பெரும் கப்பல்களும் கோயில்களும் கட்டப்பட்ட தொழில்நுட்பம் வரை நாம் எதையும் முறையாக பதிவு செய்யவில்லை. எம்மிடம் நிறைய இருந்த, இருக்கும் புவியியல், நிலவியல், காட்டியல், கடலியல், வானியல் அறிவுகளைக் கூட நாம் விரிவாகப் பதிவுசெய்யவில்லை, பகிரவில்லை. இதனால்தானோ ஐரோப்பாவில் தோன்றிய அறிவியல் புரட்சியோ, தொழிபுரட்சியோ எமது சமூகத்தில் நடக்கவில்லை. இன்றும் புத்தாக்கத்திலோ, கண்டுபிடிக்ககளிலோ நாம் பெரும் முன்னேற்றத்தைக் காணவில்லை.

யேர்மனி, யப்பான், சீனா, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் தொழிற்கலைகளுக்கு பெரும் மதிப்பு உண்டு. இந்த நாடுகளில் தொழிற்கலைகளை ஆவணப்படுத்த, பகிர, கற்க பல வசதிகள் உள்ளன. இங்கே இயல்பாக ஈடுபாடு மிக்க, திறங்கள் மிக்க தொழிற்கலைஞர்கள் உருவாகிறார்கள். இத்தகைய ஒரு சூழலே புத்தாக்கத்துக்கு அடித்தளமாக அமைகிறது. அத்தகைய ஒரு சூழலை தமிழ்ச் சமூகத்தில் ஆக்க வேண்டும் ஆயின் எமது தொழிற்கலைகளை நாம் மீட்டெடுத்து, ஆவணப்படுத்தி, மீண்டும் உயிரோட்டம் உள்ள கலைகளாக மாற்ற வேண்டும். பெரும் உற்பத்தி முறைமையிலும் கூட பல மறக்கப்பட்ட கலைகள் தமக்கான ஒரு இடத்தை மீண்டும் பிடித்துக் கொள்ள முடியும்.

எமது தொழிற்கலைகளை மீட்டெடுப்பதன் முதற்படி ஆய்வும் ஆவணப்படுத்தலும் ஆகும். அதற்கான ஒரு செயற்றிட்ட முன்மொழிவே இதுவாகும்.

இலக்குகள் - Goals and Objectives

இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் தொழிற்கலைகள் பல்லூடக முறையில் விரிவாக ஆய்ந்து, ஆவணப்படுத்தி,பகிர்ந்து அவை தொடர்பான விழிப்புணர்வு, மீட்டெடுப்பு, கல்விப் பணிகளுக்கு உதவுதல்.

செயற்பரப்பு - Scope

இந்த செயற்திட்டத்தை படிப்படியாக செய்ய முடியும். முதலாவதாக தமிழர் தொழிற்கலைகள் பற்றிய மேல்நிலை இருப்பை அல்லது பட்டியலையும் அவை தொடர்பான ஒரு நூலடைவையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இந்த முதற்கட்ட ஆய்வில் ஒவ்வொரு கலை பற்றியும் கிடைக்கக் கூடிய தகவல் மூலங்கள், அவற்றின் நிலை பற்றி ஓரளவு புரிதல் கிடைக்கும். அந்தக் கலைகளை ஆவணப்படுத்த தேவையான காலம், வளங்கள் பற்றியும் ஒரு மதிப்பீட்டைப் பெறலாம். அடுத்த கட்டமாக அழிவு நிலையில் இருக்கும் கலைகள் அல்லது விரிவாக ஆவணப்படுத்தல் செய்யப்பட்டாத கலைகளை ஒவ்வொன்றாகத் தேர்தெடுத்து பின்வருவது போன்ற ஒரு தரவுத்தள மாதிரியைத் தொடங்கி ஆய்வை மேற்கொள்ளலாம்.

ஒரு தொழிற்கலையை ஆய்வுக்கு தேர்தெடுத்த பின்பு முதலாவதாக அது தொடர்பாக கிடைக்கும் தகவல் மூலங்களையும் தொடர்புகளையும் (தொடர்புகள், நிறுவனங்கள்) பதிவுசெய்து கொள்ள வேண்டும். பின்னர் கள ஆய்வை வடிவமைத்து முன்னெடுக்க வேண்டும். கள ஆய்வின் போது பல்லூடக ஆவணங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஆய்வின் தரவு/தகவல் வடிவமைக்கு ஏற்ப இறுதிப் பொருட்களை (end products) உருவாக்கித் தர வேண்டும்.

ஆய்வாளருக்குத் தேவையான தகுதிகள்

ஆய்வாளருக்கு ஆய்வுத் திறன்கள் (நூலாய்வு, கள ஆய்வு), ஆவணப்படுத்தல் திறன்கள், தொடர்பாடல் திறன்கள் அவசியம் ஆகும். தமிழில் கருத்துக்களை தெளிவாக தொகுத்து எழுதக் கூடிய திறன் வேண்டும். ஆங்கில மற்றும் பிற மொழிகள் அறிந்திருத்தல் விரும்பத்தக்கது. கணினியைப் பயன்படுத்த, தமிழில் தட்டச்சு செய்ய, ஆய்வுக்கு, தொடர்பாடலுக்குப் பயன்படுத்த தெரிந்து இருக்க வேண்டும். ஆவணப்படுத்தல் கருவிகள் முறைகள் பற்றிய அறிவு அல்லது அவற்றைக் கற்றுக் கொள்ள ஆர்வம் தேவை. பிறரோடு சேர்ந்தியங்கவும், தானாக ஆய்வை முன்னகர்த்தக் கூடியவராகவும் இருக்க வேண்டும். மாணவர்கள் அல்லது இள ஆய்வாளர்கள் சிறப்புக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுவர்.

ஆவணப்படுத்தல் உள்ளடக்க மாதிரி

  • பெயர் (Name)
  • வரையறை (Definition/Description)
  • வகை (Type/Classification)
  • முக்கியத்துவம்/பயன்பாடுகள் (Importance/Utility)
  • தனித்துவம்/Uniquness
  • வரலாறு (History)
  • தேவைப்படும் கல்வி, பயிற்சி, திறன்கள் (Required Education, Traning, Skills)
  • கருவிகள் (இருந்தால்) (Tools - if required)
  • உள்ளீட்டுப்/மூலப் பொருட்கள் (இருந்தால்) (Inputs/Raw Materials - if required)
  • உற்பத்திப் பொருட்கள் (இருந்தால்) (Output/Products - if applicable)
  • செய்வது எப்படி (How to)
  • செயலாக்க முறைகள் (Production Methods)
  • நுட்பங்கள்/நுணுக்கங்கள் (Technologies/Techniques)
  • பொருளாதாரப் பங்கு (Economical impact)
  • இன்றைய நிலை (Current Situation)
  • வாயப்புக்கள்/எதிர்காலம் (Opportunities/Future)
  • தொழிற்கலைஞர்கள்/வணிகங்கள் (Craftsperson/Businesses)
  • ஆய்வாளர்கள் (Researchers)
  • நூலடைவு (Bibliography)
  • கலைச்சொற்கள்(Terminology)
  • ஒளிப்படங்கள் (Images)
  • வரைபடங்கள்/தகவல்படங்கள் (Diagrams/Infography)
  • ஆவண நிகழ்படங்கள் (Documentary)
  • நேர்காணல்கள் (Interviews)

மதிப்பீட்டுச் செலவுகளும் வளங்களும் - Estimated Costs and Resources

நிதி வளம்

  • ஆய்வாளருக்கான ஊதியம்
  • பயணச் செலவுகள்
  • கருவிச் செலவுகள்

தேவைப்படும் பொருட்கள்

  • மடிக்கணினி/Laptop
  • தரமான ஒளிப்படக் கருவி
  • தரமான நிகழ்படக் கருவி

உசாத்துணைகள் - References

மூல ஆவணம்

https://docs.google.com/document/d/1d4tAeglD2ounN8GhCfADDDushWt8ULcGbHffThGeWn8/edit?usp=sharing

⚠️ **GitHub.com Fallback** ⚠️