தொழிற்கலைகளை ஆவணப்படுத்தல் செயற்திட்ட ஆய்வுக் குறிப்புகள் - noolahamfoundation/project-proposals GitHub Wiki

Table of Contents

தலைமுறைகளின் யுத்தம்

இந்தியாவில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மக்களின் புழக்கத்தில் இருந்த புழங்குபொருட்களைத் தொகுத்து ஆவணப்படுத்தும் ஆய்வினை ஒருவர் செய்வதற்காக நிதியினைக் கோரியிருந்தார். இன்னொருவர் வேளாண்மைக்கருவிகளை ஆவணப்படுத்தப் போவதாகக் காட்டியிருந்தார். ஏற்கெனவே செய்யப்பட்ட ஆய்வுகளில் பாரம்பரிய இசைக்கருவிகள், ஆட்டக் கருவிகள், அரங்கியல் கருவிகள் போன்றன ஆவணப் படுத்தப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து இந்தியாவின் பாரம்பரியத் தொழில்களான வேளாண்மை,கால்நடை வளர்த்தல், மீன்பிடித்தல், கைவினைப் பொருட்களான பாய் முடைதல், கூடை முடைதல்,மட்பாண்டங்கள் செய்தல், கயிறு திரித்தல், துணி நெய்தல், ஆபரணங்கள் செய்தல், கூரை வேய்தல் என அனைத்தும் ஆவணப்படுத்தப்பட வேண்டும் என முன் மொழியவும் செய்திருந்தார்.

Url: http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=2191

Title: தலைமுறைகளின் யுத்தம் : சா.கந்தசாமியின் தக்கையின் மீது நான்கு கண்கள்.

Author: அ.ராமசாமி

யாழ்ப்பாண வாழ்வியலில் போர்க்காலத் தொழிநுட்பங்கள்

கட்டிடத் தேவைக்குச் சீமெந்து எடுப்பதென்பது முயற்கொம்பு. எம்மவரின் மூளையென்ன லேலசுப்பட்டதா? கற்றாளை மரத்தை வெட்டிச் சாறாக்கினார்கள். அதனை மணலுடன் கலக்கினார்கள். அத்துடன் சுண்ணாம்பு, சர்க்கரை சேர்த்தார்கள். அளவு பார்த்து தண்ணீர் கலந்தார்கள். பிறநாட்டுச் சீமெந்துக்குப் பதிலா 'தமிழ் சீமெந்து' உருவாகியது. ஆனால் சீமெந்துபோல வேகமாகக் கட்டி முடிக்கமுடியாது. காரணம் காய்வதில் சிறிது தாமதம். ஆனாலும் எம்மவர் தளர்வின்றி சிறிய வேலைகளுக்கு அதனைப் பயன்படுத்தினார்கள்.

Url: http://www.yarlmann.lk/viewsingle.php?id=664

Title: யாழ்ப்பாண வாழ்வியலில் போர்க்காலத் தொழிநுட்பங்கள்

Autor: வேதநாயகம் தபேந்திரன்

புழக்கத்தில் இருந்து மறைந்து போன..

பண்டைக் காலத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய வழக்கத்தில் இருந்த பயன்பாட்டுப் பொருட்கள் பலவற்றை பொதுவாக எடுத்து நோக்கும் போது,தேவைக்கு ஏற்றவகையில்அவை அருகிப்போயின. ஆரம்பத்தில் மனித நாகரீக வளர்ச்சியின் படிக்கல்லாக, மட்பாண்டங்கள் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆயினும் காலக்கிரமத்தில் பாவனைப் பிரயோகத்திற்கும் மற்றும் தேவைக்கும் வசதிக்கும் அமைய, பலதரப்பட்ட உலோகங்களாலான பாவனைப் பொருட்கள், புழக்கத்தில் வந்தன.

Url: http://www.kalaikesari.com/article.php?nid=41

Title: புழக்கத்தில் இருந்து மறைந்து போன தமிழரின் பாரம்பரிய பாத்திரங்களும் பாவனைப் பொருட்களும்

Author: அபிலாஷிணி வாசுதேவன்

யாழ்ப்பாணத்துத் தொழில் சாலைகளும் புலம்பெயர்ந்தோரின் கடப்பாடுகளும்

சரி அங்கு - வளங்களற்ற அந்த வரண்ட பூமியில் என்னதான் செய்யலாம் என்று கேட்பவர்களுக்காக கீழ் வருவன.இந்த வளங்களற்ற பூமியில் தான் காங்கேசந்துறை சீமேந்துத் தொழிற்சாலை, பரந்தன் இரசாயணத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம்,வாழைச்சேனை காகித ஆலை என்பன இயங்கின.

Url: http://akshayapaathram.blogspot.ca/2012/09/blog-post_19.html

Title: யாழ்ப்பாணத்துத் தொழில் சாலைகளும் புலம்பெயர்ந்தோரின் கடப்பாடுகளும்

Author: மணிமேகலா

தமிழக நிலவரம்(2009)

மரபுத் தொழிலை மீட்டெடுப்பது பற்றி தோழர்கள் உரக்கப் பேசுகிறார்கள். மரபுத் தொழில் என்பதே நிலக்கிழமைப் பொருளியல் கட்டத்துக்கு உரியது. சாதி - வருணங்கள் அடிப்படையில் அமைந்த ஒரு கட்டமைப்பில் பல்வேறு குழுவினர் அவரவர்களுக்கு என்று வரையறுக்கப்பட்ட வகையில் வாழ்வதற்கு வடிவமைக்கப்பட்டவை அவை. இன்று குமுகக் கட்டமைப்பு பெருமளவில் மாறியுள்ளது. மக்களின் தேவைகள் பழைய சிறைக்கூண்டுகளை உடைத்துவிட்டுப் பரவலாகிவிட்டன. அவற்றுக்கு ஈடு கொடுக்க மரபுத் தொழில்கள் உதவா. ஆனால், மரபுத் தொழில்கள் என்ற இந்த முழக்கத்தை வலியுறுத்துவது, வெளியிலிருந்து வரும் நெருக்கல்களை எதிர்கொள்ளும் புதிய ஆற்றல்கள் உள்ளே உருவாவதை உளவியலில் தடுக்கும் ஒரு முயற்சியாக முடிய வாய்ப்பிருக்கிறது...........நம் மரபுத் தொழில்நுட்பங்கள் நம்மிடம் கிடைக்கும் மூலப்பொருட்களிலிருந்து நம் தேவைகளை நிறைவேற்றுபவை. அவற்றை இன்றைய அறிவியலுக்கு ஏற்றவாறு மேம்படுத்தி பெருந்தொழில்களாக வளர்த்து நம் மக்களின் வளர்ந்துவரும் தேவைகளை ஈடு செய்ய வேண்டும். இங்கு மரபுத் தொழில்களுக்கும் மரபுத் தொழில்நுட்பங்களுக்கும் உள்ள வேறுபாட்டைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Url: http://kumarimainthan.blogspot.ca/2009/07/2009-4.html

Title: தமிழக நிலவரம்(2009)

Author: குமரிமைந்தன்

உலகமயமாக்கப் பின்னணியில் பண்பாடும், வாசிப்பும்

பண்பாடு என்பது பொருள் உற்பத்தியில் தொடங்குகிறது. ஒரு குழந்தை இலையில் தனக்கான பீப்பியை செய்து கொள்கிறது. தனக்கான வண்டியை செய்து கொள்கிறது. தனக்கான காகிதப்பையை செய்து கொள்கிறது. இப்படி தனக்காக செய்து கொள்கிறபோதுதான் கலாச்சாரம் பிறக்கிறது. பொருள் உற்பத்தியில்தான் உறவுகள் மலரும். பொருள் உற்பத்தி செய்கிற போது மனிதன் கலாசாரம் உடையவன் ஆகிறான். அது வாடுகிற போது கலாச்சாரமும் செத்து போய் விடுகிறது. உலகமயமாக்கம் என்ற பெயரில் இவர்கள் உலகையே சந்தையாக்க முயல்கிறார்கள். சந்தையில் எதைவிற்றால் லாபம் கிடைக்கும் என்பதைத்தான் பார்ப்பார்கள். அங்கு மனிதர்களின் உணர்வுகளுக்கு இடமிருக்காது. மரபு வழியான அறிவுச்செல்வத்தைத் (இதைத்தான் மார்க்ஸ் ‘’தொகுக்கப்படாத விஞ்ஞானம்’’ என்றார்) திட்டமிட்டுக் கொள்ளையடிப்பது உலகமயமாக்கம்.. நம்முடைய பாரம்பரிய மருத்துவ அறிவுகளை கொள்ளையடிப்பது உலகமயமாக்கம்.

Url: http://tnsftheni.blogspot.ca/2011/12/blog-post_6653.html

Title: உலகமயமாக்கப் பின்னணியில் பண்பாடும், வாசிப்பும்

Author: தொ.பரமசிவன் உரை

நாட்டாரும் புழங்கு பொருள் பண்பாடும்

விஞ்ஞானத்தின் விளைவால் நாளும் தொழில் பெருகிப் புழங்கு பொருள் வகையிலும் பயன்பாட்டிலும் புதுமை உருவாகி வருகின்றது. வாழ்க்கை முன்னேற்றம் கருதி நாம் அனைவரும் அதனை அவாவி நிற்கின்றோம். எனினும் நாட்டுப்புறப் பண்பாட்டை உணர்த்தும் புழங்கு பொருள்கள் நம் வாழ்க்கை முறைகளுள் தகுந்த இடத்தைப் பிடிக்காமல் இல்லை. இத்தகைய சூழலில் நாட்டார் வாழ்வும் அவர்களால் உற்பத்தி செய்யப்பெறும் புழங்கு பொருட்களும் அடிப்படை மரபுகளில் எவ்வாறு நிலைத்து நிற்கின்றன என்று ஆராயும் நோக்கில் இக்கட்டுரை அமைகின்றது.

Url:http://thoguppukal.wordpress.com/2011/09/21/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

Title: நாட்டாரும் புழங்கு பொருள் பண்பாடும்

Author: முனைவர் சி.வாசுகி

கலாசாரத்தை ஒத்த "பழங்குடி நாதம்'!

நீலகிரியில் வசிக்கும் பழங்குடியினத்தவர்களில் தோடர்கள் எருமை மேய்த்தல், விவசாயம், எம்பிராய்டரி ஆகியவற்றையும், கோத்தர்கள் இசைக் கலைஞர்களாகவும், மண்பாண்டத் தொழிலிலும், விவசாயத் தொழிலிலும் ஈடுபட்டவர்களாகவும் உள்ளனர். வேட்டைத்தொழிலையே பிரதானமாகக் கொண்டிருந்த இருளர்கள் தற்காலத்தில் காட்டுக்குள்ளிருந்து தங்களுக்கு உணவு சேகரித்தலிலும், விவசாயக் கூலிகளாகவும், காட்டுநாயக்கர்கள்(இவர்களை தேன் குரும்பர்கள் எனவும் அழைப்பர்) தேன் சேகரித்தலிலும், முள்ளுக்குரும்பர்கள்(இவர்களை வேடர்கள் எனவும் அழைப்பர்) வேட்டையாடுதல் மற்றும் விவசாயத் தொழிலாளிகளாகவும், பெட்ட குரும்பர்கள் கூடை மற்றும் பாய் முடைதல், வேட்டைக்கான உபகரணங்களை தயாரித்தல் ஆகியவற்றிலும், பணியர்கள் கூலித் தொழிலாளிகளாகவும் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளனர்.

Url: http://dravida-nadu.blogspot.ca/2012/09/blog-post_4834.html

Title: கலாசாரத்தை ஒத்த "பழங்குடி நாதம்'!

இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி...

தேக்கு, ஆசினி, மலை வேம்பு போன்ற மரங்கள் இத்தகைய கப்பல் கட்டும் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன எனத் தெரிகிறது. இந்திய நாட்டின் பாரம்பரியக் கப்பல் கட்டுமானத் தொழிற்கல்வி தச்சர்களில் ஒரு பிரிவினரால் பயிலப்பட்டு வந்துள்ளது. இத் தச்சர்களை 'மாந்தையர்' என 'ஐவர் ராஜாக்கள் கதை' போன்ற தமிழிலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இச் சொல் மா வித்தையர் அல்லது மா விந்தையர் என்ற தொடரின் திரிபாகத் தோன்றுகிறது. இந்தியர்களின் கப்பல் கட்டும் வித்தை பற்றிக் கி.பி. 13ஆம் நூற்றாண்டைய வெனிஸ் பயணியான மார்கோ போலோ மிகவும் புகழ்ந்துள்ளார். சுமத்ரா நாட்டின் பாரோஸ் துறைமுகத்தில் உள்ள கி.பி. 1088ஆம் ஆண்டைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டு ஒன்றில் 'மாவேத்துகள்' (மகாவித் என்பதன் திரிபு) என்று இக் கப்பல் கட்டும் தச்சர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். பொதுவாக விஸ்வகர்ம சமூகத்தவரே பண்டைக் காலப் பொறியியல் நிபுணர்களாதலால், தமிழ் நிகண்டுகள் அவர்களை அறிவர், வித்யர் என்று குறிப்பிடுகின்றன. ஆசாரி என்ற சாதிப் பட்டப் பெயரும், வித்யை கற்பிக்கும் ஆசார்ய பதவி தொடர்பானதே. கி.பி. 18-19ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்து நாட்டில் நிகழ்ந்த தொழிற்புரட்சியின் விளைவாகத் தொழில் துறையில் இயந்திரமயமாதல் அறிமுகப்படுத்தப்பட்டதால் நம் நாட்டின் பாரம்பரியத் தொழில் நுட்பங்கள் ஆங்கிலேயரால் உறிஞ்சி சீரணிக்கப்பட்டன.

Url: www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20606099&format=print&

Title: இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி...

Author: எஸ். இராமச்சந்திரன்

குலக்கல்வி,கலைகள்-கடிதம்

ராஜாஜியின் கல்வித்திட்டம் காந்திய முன்மாதிரி கொண்டது. மாணவர்கள் இளமையிலேயே ஏதேனும் கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொண்டாகவெண்டும் என்று காந்தி மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். தன் மகன் ராமதாசுக்கு எழுதிய கடிதத்தில் அவர் செருப்புத் தைக்கக் கற்றுக்கொள்வது நல்லது என்று சொல்கிறார் காந்தி. ராஜாஜி திருச்செங்கோட்டில் நடத்திய ஆசிரமப் பள்ளியில் நெசவு முதலியவை கற்பிக்கப்பட்டன.

Url: http://www.jeyamohan.in/?p=16841

Title: குலக்கல்வி,கலைகள்-கடிதம்

Autor: ஜெயமோகன்

மீன்பிடித்தொழிலும் நம்ம பாரம்பரியமும் மாறுமா???

முதல்ல தோணியில்(canoe) கரைவலை ஏற்றப்படும் இது தான் கரைவலைத்தோணி அதன்மேல் கரைவலை உள்ளது. பின்னர் மீன்கூட்டத்தைக் கண்டவுடன் "தோணி" தள்ளப்பட்டு வளைத்து கரைவலை போடப்படும்.(அதாவது தோணியின் மூலம் வலை கடலுக்குள் இடப்படும்) மீன்கூட்டத்தை (Schooling of fish) "சிகப்பு " எண்டு சொல்லுவர். "டேய் அங்கபாரு சிவப்பு தெரியுது ...." இப்படி சொல்லுவர். பின்னர் இழுக்கும் கயிறு இதனை "கம்பான்" கயிறு என்றழைப்பர். இது ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு தோணியிலிருந்து கொடுக்கப்படும். பின்னர் இருபக்கமும் கயிறு இழுக்கப்படும் இதனையே வலையிழுத்தல் என்று சொல்லப்படும். கயிறு இழுக்க பெரிய கண் வலை இழுக்க பின்னர் சிறிய கண் வலை இழுக்கப்படும் அதன்பின் மிகச்சிறிய கண் உள்ள வலை அதாவது மடி என்றழைக்கப்படும் வலை கரையேறும். இதிலே தான் சிறைப்படுத்தப்பட்ட மீன்கள் இருக்கும். பின்னர் தோணி கரைக்குத் தள்ளப்படும்.

Url: http://sidaralkal.blogspot.ca/2010/01/blog-post_30.html

Title: மீன்பிடித்தொழிலும் நம்ம பாரம்பரியமும் மாறுமா???

Author: ரமேசு

எமது தொழிற்கலைகளை பேணுதல், ஆவணப்படுத்தல், புத்தாக்கல்

அந்தக் கலைகள் எல்லாம் காலவதியாகி விட்டன என்பது ஒரு பெரும் பொய். இன்றும் இன்னும் பல மில்லியன் தமிழர்கள் கலப்பையால் உழுத அல்லது கையால் நாத்து நடப்பட்ட அரிசியையே உண்ணுகிறார்கள். இன்றும் இன்னும் பல்லாயிரக்கணக்காண தமிழர்கள் கரைவலையால் இழுக்கப்பட்ட மீன்களையே உண்ணுகிறார்கள். இன்றும் இன்னும் உள்ளூரில் மரவேலைக்கலை உயிர்ப்புடன் இருக்கிறது. உலோகக் கலை, நெசவுக்கலை, கட்டிடக்கலை, பல்வேறு கைத்தொழில்கள் என்று பல தொழிற்கலைகள் இன்றும் இன்னும் எமக்கு வாழ்வாதரமாக இருக்கின்றன. இவை வாழ்வாதரம் மட்டும் அல்ல எமது அடையாளமும் கூட. ஆனால் நாம் இவற்றைப் பேணுவது பற்றியோ, ஆவணப்படுத்துவது பற்றியோ சற்றும் அக்கறை அற்றவர்களாகவே இருக்கிறோம்.

Url: http://tamilwikipedia.blogspot.ca/2011/11/blog-post_26.html

Title: எமது தொழிற்கலைகளை பேணுதல், ஆவணப்படுத்தல், புத்தாக்கல்

Author: Natkeeran

Why handicrafts?

Handicrafts are an important part of our cultural heritage. We want to hand down our shared cultural heritage to future generations. Hemslöjden is a meeting-place without borders for different cultures, where making something by hand is the common language. Handicrafts can bring people together.....In the constant endeavour for development towards a sustainable society, many have begun to discover the importance of handicrafts. Handicrafts have become a way of taking a stance. An expression of a desire to live in a sustainable way, in several senses of the word. Handicrafts use natural materials and re-used materials. Handicrafts provide knowledge about how to make things that last. Handicrafts are resource efficient and can also act as models for production and processes on a larger scale.....Because handicrafts are about being able to make the things you need yourself, they are a way of solving problems independently. They create a sense of context, belonging and roots in the world by building on the long traditions of handicrafts. Furthermore, they fill people’s everyday lives with wellbeing, beauty and creative joy. The Hemslöjden organisation wants to raise awareness that it exists and is here for everyone.

Url: http://www.hemslojden.org/english/why-handicrafts/

Title: Why handicrafts?

Traditional Craft Products

A - The article must be used mainly in everyday life. B - The article must be primarily manufactured by hand. C - The article must be manufactured using traditional techniques. D - The materials should be mainly those which have been traditionally employed. E - The industry must be of a regional nature.

Url: http://kougeihin.jp/en/association/introduction, http://kougeihin.jp/en/top

Title: Traditional Craft Products

FAB Labs

FAB Labs stand for Fabrication Laboratories. These are collection of tools and technologies developed by MIT and others to allow for fabrication of a range of products (theoretically any item one needs). The idea is to specify a product in software, and to fabricate it using the FAB Lab technologies. The key tool is the 3-D printer, which theoretically can be a Replicator (able to produce it self). The idea behind the technology is to extend engineering capacity to individuals. However, it is not economically feasible for individuals to take advantage of this technology at this moment. But, for a community the technology and benefits are very promising. In fact, FAB Labs have been used as community development tools throughout the world (ex: Boston's, South End Technology Center).

FAB: The Coming Revolution on Your Desktop--From Personal Computers to Personal Fabrication (Hardcover)

ng=UTF8&n=507846&s=books

நவீன தொழில், மரபுத் தொழில்

Url:http://www.tubetamil.com/tamil-tv-shows/vijay-tv-shows/neeya-naana-23-09-2012-vijay-tv-vijay-tv-neeya-naana-neeya-naana-23092012-neeya-naana-19-09-2012.html

Title: நவீன தொழில், மரபுத் தொழில்

Author: Vijay Tv

உசாத்துணை நூல்கள்

  • எழிலவன். (2010). தமிழகத்தின் மரபுக் கலைகள் (களப்பணியும் ஆவணமும் கைகோர்க்கும் பதிவுகள்). சென்னை: பிளக்கோல் மீடியா.
  • த. ரெஜித்குமார். (200x). மரபுத் தொழில்கள். சென்னை: காவ்யா பதிப்பகம்.http://kaavyaa.com/nattupuravial.html#!prettyPhoto[gallery2]/4/

விக்கியூடகங்கள்

துறைசார் தமிழ் வலைத்தளங்கள்

நிறுவனங்கள்

http://www.folkartandcraft.net/members/swedish-handicraft-society/ http://tamilwikipedia.blogspot.ca/2011/12/blog-post_08.html

பிற

http://theagenda.tvo.org/episode/179067/diy-economics http://diycultures2012.wordpress.com/2012/10/04/chris-andersons-makers-and-the-new-industrial-revolution/ http://www.craftsintheenglishcountryside.org.uk http://www.nihon-kogeikai.com/TEBIKI-E/3.html

Needs to be evaulated

  • http://kumarimainthan.blogspot.ca/2007/08/blog-post_8530.html
  • 69264_creative_industries.pdf - https://www.unido.org/uploads/tx_templavoila/69264_creative_industries.pdf
  • 207-807-1-PB.pdf - www.indianfolklore.org/journals/index.php/fofolk/article/download/207/214
  • http://www.unescobkk.org/fileadmin/user_upload/culture/Cultural_Survival/Phase_II_regional_expansion/Resources/Guidelines_to_document_the_production_of_traditional_crafts.pdf
  • http://blueprintfiles.s3.amazonaws.com/1368626588-CCS_HERITAGECRAFTMAP_FINAL_TEXT_PRINTAW_AW6.pdf
⚠️ **GitHub.com Fallback** ⚠️