இயற்கை மரபுவள நூலகம் தொடர்பான குறிப்புகள் - noolahamfoundation/project-proposals GitHub Wiki

ஜல்லிக்கட்டு விவாதங்கள் ஒரு முக்கிய விடயத்தை எமக்கு முன்வைத்துள்ளன. நாம் எப்படி எமது இயற்கை மரபுவளங்களை (natural heritage), பல்வகைத்தன்மையை (biodiversity) பாதுகாப்பது, பேணுவது என்பதாகும். திணைகள் (landscapes), விதைகள் (எ.கா சிறுதானியங்கள் - Heritage Seed Library ), கால்நடை/விலங்கு வகைகள் (எ.கா நாட்டு மாடுகள் ? - https://en.wikipedia.org/wiki/Rare_breed_(agriculture)), காடுகள், கடற்கரைகள், மீண்பிடிப்பு வலயங்கள், இயற்கைச் சூழல் என எனப் பல இந்த இயற்கை மரபுவளம் என்பதற்குள் வருகின்றது.

ஒரு இயற்கை வளம் உலகப் பாரம்பரியக் களமாக நியமனம் பெற முடியும். பண்பாட்டுப் பொருளாதார முக்கியத்துவம் பெற முடியும். நூலக நிறுவனத்தில் இயற்கை மரபுவளம் பற்றி தகவல் களத்தை உருவாக்குவது நாம் இது பற்றி செய்யக் கூடிய ஒரு முக்கிய பணியாக இருக்கும். இவ்வாறான ஒரு செயற்திட்டத்துக்கு நல்ல எடுத்துகாட்டு Biodiversity Heritage Library (biodiversitylibrary.org) ஆகும்.

http://www.biodiversitylibrary.org/part/153332#/summary http://www.biodiversitylibrary.org/part/155192#/summary

குறிப்புகள்

இயற்கை மரபுரிமை (Natural or Biodiversity Heritage) அல்லது இயற்கை வரலாறு (Natural History) மேற்கில் நன்கு வளர்ச்சியடைந்த கருத்துரு. ஐக்கிய இராச்சியத்தின் http://www.nhm.ac.uk/, ஐ.அ https://naturalhistory.si.edu/ ஆகியன எடுத்துக்காட்டு. தற்போது Online இக்கு வந்துருக்கும் பல ஐரோப்பிய நாட்டு எண்ணிம நூலகங்களில் இலங்கையின் இயற்கை மரபுரிமை பற்றி பல தகவல் வளங்கள் உள்ளன என்பதும், அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம், நூலகத்தில் இணைக்கலாம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

எப்படி இயற்கை மரபுரிமையை ஆவணப்படுத்தலாம் என்பதற்கு http://olta.ca/wp-content/uploads/2013/03/OHT-OLTA-BDR-Nov-2008.pdf, http://www.dnr.state.mn.us/nhnrp/nhis.html போன்ற ஆவணங்கள் உதவும்.

⚠️ **GitHub.com Fallback** ⚠️