NF : Project : Prototyping Integrated Digital Preservation Solution - noolahamfoundation/multimedia GitHub Wiki

மேலதிக விபரங்களுக்கு தயந்து இந்த விரிவான அறிக்கையைப் பார்க்கவும்: பல்லூடக ஆவணகத் தளச் (Multimedia Archiving Platform) செயற்றிட்டக் கற்றல்கள்

Table of Contents

செயற்திட்டச் சுருக்கம்

  • Project Title/செயற்திட்ட தலைப்பு: NF : Project : Prototyping Integrated Digital Preservation Solution - பல்லூடாக ஆவணகத் தளம் நிறுவுதல்
  • Project Number/செயற்திட்ட இலக்கம்:
  • Project Location/செயற்திட்ட இடம்:
  • Department/Sector/செயற்திட்டப் பிரிவு: தொழில்நுட்பம்
  • Implementing Agency and Contribution/நிறைவேற்றும் நிறுவனம் மற்றும் பங்களிப்பு: நூலக நிறுவனம்
  • Grant Agency and Contribution/நிதியளிக்கும் நிறுவனம் மற்றும் பங்களிப்பு: நூலக நிறுவனம்
  • Start and End Date/தொடக்க திகதியும் முடிவுத் தொகுதியும்: Jan 2016 - Dec 2016
  • Responsible Stakeholders/முதன்மைப் பங்காளர்கள்: நூலக நிறுவனம்

இந்த ஆவணத்தின் வாசகர்கள்

நூலக நிறுவனத்தின் ஊழியர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும், இந்நிறுவனத்தின் செயற்திட்டங்களில் ஒன்றான, பல்லூடாக ஆவணகத் தளம் நிறுவுதல் (Prototyping Integrated Digital Preservation Solutio என்ற செயற்திட்டம் பற்றிய அறிமுகத்தை வழங்குவதும், அந்தச் செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்குத் தேவையான தகவல்களைத் தொகுப்பதும் ஆகும். இந்த ஆவணம் தொழினுட்ப அணி, ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருக்கும் பயன்படும்.

நோக்கங்கள், இலக்குகள்

நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகம் அச்சில் பதிக்கப்பட்ட எழுத்தாவணப் படைப்புக்களையே (published works) பெரும்பாலும் பாதுகாத்து அணுக்கப்படுத்தி வந்துள்ளது. அச்சு எழுத்தாவணங்களைத் தாண்டி பல்லூடகங்களை, எண்ணிமப் பிறப்புக் கொண்ட படைப்புக்களை ஆவணப்படுவது அவசியம் என்பது 2011 வியூகத் திட்டமிடல் ஊடாக நன்கு உணரப்பட்டது. பல்லூடக வளங்களைச் சேகரித்தல், ஒழுங்குபடுத்தல், பாதுகாத்தல், காட்சிப்படுத்தல், தேடுதல் உட்பட்ட வசதிகளைக் கொண்ட நிறுவுதல் இந்தச் செயற்திட்டத்தின் முதன்மை நோக்கம் ஆகும்.

முக்கிய பங்கேற்ப்பாளர்கள்

  • நூலகப் பயனர்கள்
  • நூலக நுட்பச் செயலாக்கம்
  • தமிழ்க் கணிமை ஆர்வலர்கள்
  • நூலக எண்ணிம ஆவணப்படுத்தல் செயலாக்கம்
  • நூலக சேகரிப்புக்கள் வளர்ச்சி செயலாக்கம்

நூலக நிறுவன நோக்கங்கள்/வியூகங்களூடன இணைவு *

பல்லூடக, எண்ணிமப் பிறப்புக் கொண்ட ஆக்கங்களை பாதுகாத்தல், அணுக்கப்படுத்தல் நூலக நிறுவனத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். நூலகத்தின் பல்லூடக ஆவணகப்படுத்தல், அணுக்கப்படுத்தல் நோக்கங்களை இந்தச் செயற்திட்டம் சாத்தியம் ஆக்கும்

நடிபங்குகளும் பொறுப்புக்களும் *

நடிபங்கு/Role பொறுப்பு/Responsibility அறிக்கையிடல்/Reporting
Staff Coordinator - Gajani ([email protected]) அறிக்கையிடல் RB/வழிகாட்டுநர் சபை
Project Manager/Coordinator - Umadaran Sivadas <[email protected]></[email protected]> செயற்திட்டத்தை நிறைவேற்றல், மேலாண்மைச் செய்தல், Staff Coordinator/to RB if required
Project Designer - NF Technology/Natkeeran ([email protected]) Project Documentation, Design, Evaluation RB/வழிகாட்டுநர் சபை
Project Oversight - RB/வழிகாட்டுநர் சபை Project Documentation, Design, Evaluation
Subject Matter Experts - Shrinivasan T, Sundar Lakshmanan Provide input/support with regards to Tamil OCR tooling

செயற்பரப்பும் செயற்பாடுகளும்

  • அடையாளம் காணப்பட்ட தேவைகளை நிறைவுசெய்யக்கூடிய பல்லூடக ஆவணகத் தளத்தை நிறுவுதல்.

திட்ட முடிவு வரையறை

  • பல்லூடக அவணகத் தளம் நிறுவப்பட்டு வெளியிடப்படும் பொழுது இந்தச் செயற்திட்டம் நிறைவு பெறும்.

KPIs, அறிக்கையிடல், தொடர்பாடல் *

ஒவ்வொரு மாதமும் இதனைக் கவனிக்கும் பணிக் குழுவுக்கு (NF : Project : Prototyping Integrated Digital Preservation Solution - Working Group மின்னஞ்சல் இழை) செயற்திட்ட நிலை அறிக்கைகள் வழங்கப்படுகின்றன. இந்த அறிக்கைகளை Staff coordinator மாதாந்த அறிக்கைகளில் தொகுத்து வழிகாட்டுநர் சபைக்கு வழங்குகிறார்..

கால அட்டவணையும் மைல்கற்களும்

  • மென்பொருள் தெரிவு
  • மென்பொருள் நிறுவுதல் & அமைப்புவடிவமைத்தல்
  • உள்ளக வெளியீடு
  • பொது வெளியீடு

வரலவுசெலவு *

  • தொடக்கக் கட்டச் செலவுகள் - அ$20 - வழங்கி புரவல்

நிதி வள மூலங்கள் *

  • Natkeeran has committed to fund this project for 2016

சீர்தரங்களும் தரக்கட்டுப்பாடும்

தேர்தெடுக்கப்படும் மென்பொருள் இத் துறையில் பரந்து பயன்படுத்தப்படும் ஒன்றாக இருக்க வேண்டும்.

இடர் மேலாண்மை

  • நுட்ப அறிவு போதாமை
  • Scalability

Issue/Change Management

⚠️ **GitHub.com Fallback** ⚠️