RB Meeting May 27, 2017 (Special Meeting Orientation) - noolahamfoundation/governance GitHub Wiki

நேரம்/இடம்

Attendees

  • இ. மயூரநாதன்
  • சி. சுதர்சன் :star: (Convener)
  • இ. நற்கீரன் :star: (Note Taker)
  • சி. சேரன்
  • தி. கோபிநாத்
  • அ. ஸ்ரீகாந்தல்ஷ்மி
  • சசீவன்
  • திரு
  • சஞ்சயன்

Apologies

  • இ. பத்மநாப ஐயர்
  • ச. சிவகுமார்

Absentees

  • Bavaharan

Agenda

வரும் சனிக்கிழமை மே 27, 2018 அன்று நூலக நிறுவன வழிகாட்டுநர் சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒர் orientation உரையாடல் நடைபெறவுள்ளது. அண்மையில் இனைந்த உறுப்பினர்களுக்கு நூலக நிறுவனத்தில் வரலாறு அவ்வளவு பரிச்சியம் இல்லாமல் இருக்கலாம். மீள் இணைந்த உறுப்பினர்களுக்கு நாம் முடிவெடுக்கும் செயற்படும் விதங்களில் கொண்டுவந்த மாற்றங்கள் பரிச்சியம் இல்லாமல் இருக்கலாம். பொதுவாக ஊழியர்களுக்கும் இத்தகைய orientation உதவும். அதற்கு உதவும் வண்ணம் ஒர் ஆவணத்தை இங்கே உருவாக்கி உள்ளேன்: https://github.com/noolahamfoundation/guiding-documents/blob/master/NF%20-%20Orientation.md. இந்த ஆவணங்களுக்கு தகுந்த மேம்பாடுகளை வரவேற்கப்படுகின்றன. (உங்களுக்கு இந்த ஆவணத்தை தொகுத்த அனுமதி இல்லாவிடின் உங்கள் github கணக்கை அனுப்பவும். இணைத்து விடுகிறேன்.)

Action Items

சந்திப்புக் குறிப்புகள்

  • நூலகத்தின் தற்போதைய அமைப்பு, செயற்பாட்டு முறைகள் தொடர்பாக பொதுவான அறிமுகம் https://github.com/noolahamfoundation/guiding-documents ஆவணத்தை அடிப்படையாக முன்வைத்து வழங்கப்பட்டது.

  • ceremonial board ஐ legal ஆக இல்லாமல் செய்து RB ஐ முதன்மை ஆளுகை சபையாக மாற்றுவது தொடர்பாக பொதுவான இணக்கப்பாடு இருந்தது. ceremonial Board இன் சட்ட நடிபங்கை எப்படி ஆர்.பி/பணிப்பாளர் சபை பெற்றுக் கொள்வது, தற்போது உள்ள வழிகாட்டுநர் சபை உறுப்பினர்கள் முறையாக எப்படி பணிப்பாளர் சபைக்கு கொண்டுவருவது தொடர்பான administrative/registration சார்ந்த விடயங்கள் ஆயப்பட்டு நகர்த்தப்பட வேண்டும் என்று இணங்கப்பட்டது. குறிப்பாக இலங்கைப் பிரஜைகள் இல்லாதோர் கொண்ட ஒரு கட்டமைப்பை (எ.கா NGO registration ?) பற்றி ஆய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது . ரமணேஸ் மேற்கொண்டுவரும் governance review இந்த விடயங்களைக் கருத்தில் எடுத்துக்கொள்ளும் என்று நம்புகிறேன்.

  • advisor board இன் தொடக்கால நடிபங்கு பற்றி சசீவன் குறிப்பிட்டார். குறிப்பாக நூலக நிறுவனத்தை positive ஆக சமூகம் receive செய்ய advisory board ஒரு முக்கிய பங்கு வகித்தாக அவர் குறிப்பிட்டார். மேலும், அவர்களின் உள்ளீடுகள் இழைகளில் உள்ளதாகவும்,அவை தொகுக்கப்பட்டால் நன்று என்றும் குறிப்பிட்டார். advisory board இன் பங்களிப்பாளர்களுக்கு தகுந்த அறிவித்தல்கள், நன்றிக் கடிதங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும். அதன் நடிபங்களை மீண்டும் தெளிவாக வரையறை செய்து active செய்வது பற்றி பரிசீலிக்க வேண்டும். சுதர்சன் இது தொடர்பாக மேலும் ஆய்ந்து முன்நகர்தவுள்ளார்.

  • மூதவையின் formal role தொடர்பாகவும், அதன் composition தொடர்பாகவும் தெளிவு தேவை என்று கோரப்பட்டது. ஆளுகை மீளாய்வு, முரண் தீர்வு ஆகியன அதன் நடிபங்குகளாக இருந்து வந்துள்ளன. மூதவையின் உறுப்பினர்கள் engage செய்யப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு தேவையான தகவல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது. மேலும் மூதவையில் இடம்பெறுவோர் நூலகத்தின் சமூகம் சார்ந்த நோக்கங்களை/அரசிலையும், community oriented process இளிலும் பரிச்சியம் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது. மூதவையிலும் பல்வகைத்தன்மை கருத்தில் எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. ரமணேஸை மூதவையின் TOR ஐ விருத்தி செய்து செயற்படுத்துமாறு வேண்டுக்கள் முன்வைக்கப்பட்டது.

  • நூலகத்தின் கட்டமைப்பு (organizational chart) கூறுகள் தொடர்பாக ஒர் அரைப் பக்க சுருக்கத்தை உருவாக்கினால் நன்று என்று சிறீகாந்தலட்சுமி குறிப்பிட்டார். அவ்வாற ஒன்றை விரைவில் உருவாகிப் பகிர்வதாக நற்கீரன் குறிப்பிட்டார்.மேலும் செயலாக்கங்கள், செயற்திட்டங்கள் தொடர்பாக நிறைய உரையாட செயற்பட வேண்டி உள்ளது என்று குறிப்பிட்டார்.