RB Meeting May 21, 2017 - noolahamfoundation/governance GitHub Wiki

Time/Place

This meeting is a skype meeting. Voting rights are limited to RB members. Anyone can request to participate as observers.

Attendees

  • சிறீகாந்தலட்சுமி
  • மயூரநாதன்
  • சுதர்சன் :star2: (Convener)
  • சசீவன்
  • சிவகுமார்
  • சேரன்
  • நற்கீரன் :star: (Minute Taker)
  • திரு
  • கோபி
  • பத்மாநபஐயர்
  • சஞ்சயன்
  • சசீவன்

Apologies

Absences

  • பவாகரன்

Confirmation of Minutes

  • Previous meeting Minutes:
  • Moved:
  • Seconded:

Action Items

  • மாதாந்த அறிக்கையை முழுமைப்படுத்தி இற்றை செய்ய வேண்டும். - கஜானி
  • நாடுகள் வாரியாக நிதி திரட்டலுக்குப் பொறுப்பெடுத்தவர்கள் தமது நிதி திரட்டலில் தற்போதைய நிலை, மற்றும் மிகுதிக்கான திட்டமிடல் குறித்து ஒரு இற்றையை வரும் யூன் 11, 2017 சந்திப்பில் வழங்குதல் - சுதர்சன்/பவாகரன்/பத்மநாபஐயர்/கோபி/பிரதீபன்/சேரன்/
  • மனித வளங்கள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்தல் - சேரன்/மயூரநாதன்

Decisions

  • ஊழியர் நிலையிலும் எமக்கு ஒருவர் குறிப்பெடுக்கத் தேவை. இடைக்காலத் தீர்வாக ஒரு ஆர்.பி உறுப்பினர் குறிப்பெடுப்பெடுக்கலாம்.

Meeting Notes

    • Backup plans for Minutes taker - 5 Minutes - சந்திப்புக் குறிப்புகள்
      • சுதர்சன் - கஜானி தனிப்பட்ட விடுப்பில் இருப்பதால் கடந்த சந்திப்புக் குறிப்புகள் அனுப்பப்படவில்லை. கடந்த சில குறிப்புகள் இன்னும் முறைப்படுத்தப்படவில்லை.
      • நற்கீரன் - ஊழியர் நிலையிலும் எமக்கு ஒருவர் குறிப்பெடுக்கத் தேவை. இடைக்காலத் தீர்வாக ஒரு ஆர்.பி உறுப்பினர் குறிப்பெடுப்பெடுக்கலாம். இதனை rotation முறையில் செய்யலாம். இந்தச் சந்திப்புக்கு நற்கீரன் குறிப்பெடுப்பார்.
      • கோபி - Finance தொடர்பான விடயங்கள் உரையாடப்படத் தேவை இல்லை எனில் ஒர் ஊழியரை நியமிக்கலாம்.
      • சுதர்சன் - அது சாத்தியமில்லை. நான் நிதி உட்பட்ட பல்வேறு விடயங்களை உரையாட வேண்டி இருக்கும். விரிவான குறிப்புகள் அவசியம். தற்காலிகமாக ஆர்.பி உறுப்பினர் குறிப்பெடுப்பதை ஏற்கிறேன்.
  • திரு சசீவன் ஆகியோரின் அறிமுகம், நல்வரவு

  • April 2017 - Program Report Review - Gajani - 15 mins

    • மாதாந்த அறிக்கையில் சில செயலாக்கங்கள், செயற்திட்டங்கள் விடுபட்டுள்ளன (எ.கா எழுத்துணரி, பயனர் சேவைகள், மனித வளங்கள்), அவை சேர்க்கப்பட வேண்டும்.
  • April 2017 - Financial Report Review - Gajani - 10 mins,

    • கோபி - நிதி அறிக்கை சரியாக உள்ளது. வழக்கமான செலவுகள் உள்ளன.
  • Resource Mobilization Update - Gopi - 15 mins

    • கோபி - எமது பாதீட்டில் 10 இலட்சம் வரை shortfall உண்டு. இதற்கான திட்டமிடல் இல்லை. வெளிச் செயற்திட்டங்கள் ஊடாக ஓரளவு நிவர்த்தி செய்யலாம் என்று எண்ணி இருந்தோம். ஆனால் விக்கியூடக நிதியை இவ்வாறு பயன்படுத்த முடியாது. EAP செயற்திட்டம் approve பண்ணக் கூடியதற்கான வாய்ப்புக்கள் அரிது. நோர்வேயில் திட்டமிடல் மட்டுப்படுத்தப்பட்டதே. சஞ்சயன் அப்போது இணைந்து இருக்கவில்லை. நோர்வேயில் சற்று கூடிய பங்களிப்பை எதிர்பார்க்கக் கூடியதாக இருக்கலாம். சசீவன் மீண்டும் இணைந்து இருப்பதால் அங்கேயும் கூடுதலாக நிதி திரட்டக் கூடிய வாய்ப்பு உண்டு. இலங்கையிலும் 3 இலட்சம் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளோம். சேரன் இதை முன்னெடுப்பதாக உள்ளது.
    • சுதர்சன் - 6 மாதங்கள் முடிவடையும் நிலையில், வரவுசெலவு தொடர்பாக பொறுப்பெடுத்தவர்கள் தமது நிதி திரட்டல் தொடர்பான இற்றையை வரும் சந்திப்பில் தருவதை ஒரு action item ஆக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • Human Resources Sub Committee Update - Seran - 20 mins

    • மயூரநாதன் - Human Resources Sub - Committee சந்தித்தது. அதில் சேரன் கலந்து கொள்ளவில்லை. வாகிசன், மயூரநாதன், கஜானி ஆகியோர் கலந்து கொள்கொண்டோம். சேரனோ தொடர்புடைய பல விடயங்கள் இருந்தன. கிழக்கு, மலையகம் தொடர்பாக கஜானி இற்றை தந்தார். Staff improvement தொடர்பாக உரையாடினோம். ஆங்கில வகுப்புகள் மே மாதத்துடம் முடிவடைகின்றன. அடுத்தாக self improvement தொடர்பான பயிற்சிகள் வழங்குவது தொடர்பாக உரையாடினோம். அடுத்தது staff evaluation செய்ய வேண்டும், எ.கா 6 மாதத்துக்கு ஒரு முறை. இதனைப் பயன்படுத்தி பதவி உயர்வி. சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். மேலும், ஊழியர் தொடர்பான சிக்கல்கள் தொடர்பான உரையாடினோம். கஜானி ஊழியர் தொடர்பான விடயங்கள் முன்னேற்றம் காணப்படுகிறது. இவற்றை ஒரு report ஆக கஜானி வழங்குவதாகக் கூறினா. அது தற்போது என்னிடம் இல்லை.
    • சுதர்சன் - ஊழியர்கள் சில supplies கேட்டு இருந்தார்கள். அது வழங்கப்பட்டதா?
    • மயூரநாதன் - தெரியவில்லை. வழங்கப்பட்டு இருக்கும் என்றே நம்புகிறேன்.
    • மயூநாதன் - நாம் அனுபவம் வாய்ந்த ஓய்வு பெற்றவர்களை நியமிப்பது தொடர்பாக அலசி வருகிறோம். இவர்கள் நிலைத்து நிண்டு பங்களிக்கக் கூடியதாக இருக்கும்.
    • சுதர்சன் - ஓய்வு எடுத்தவர்களை நியமிக்கையில் working styles இல் வேறுபாடுகள் இருக்கலாம்.
    • மயூரநாதன் - ஆமாம். இது கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
  • Project Update - Tamil Wikipedia - Noolaham Foundation Crafts and Trades - Natkeeran - 5 mins

    • நற்கீரன் - நல்கைகான நேர்காணல் நடந்தது. நல்ல முன்மொழிவு என்று கூறி இருந்தார்கள். அவர்கள் ஒரு நிறுவனத்துடம் இனைந்து செயற்படுவதை விரும்புகிறார்கள். கூடிய பேண்தகு நிலையைக் கொண்டதாக இருக்கும் என்று அவர்கள் கருதுகிறார்கள். அவர்கள் Original Research க்கு fund செய்ய பெரிதும் விரும்புவதில்லை. அது எமக்குத் தெரியும். நாம் உள்ளடக்க விரிவாகக்ம் என்றே முதன்மையாக முன்மொழிவு செய்து இருந்தோம். ஆய்வு ஒரு சிறிய component ஆகவே நாம் வடிவமைத்து இருக்கிறோம். மற்றையது அவர்கள் paid content (எ.கா salaried content creation) ஐ fund செய்ய விரும்புவதில்லை. உணவுச் செலவு, பயணச் செலவு, cost reimbursement ஆகியவற்றுக்கே செலவு செய்ய முடியும். பயிற்சி, ஆதரவுக்கே எமது செலவுகள் பெரும்பாலும் செல்ல வேண்டும்.
    • மயூநாதன் - tools and resources தொடர்பாகவும் அவர்கள் வெளியீடுகளை எதிர்பார்க்கிறார்கள்.
    • சிவகுமார் - sustainability தொடர்பாகவும் அவர்கள் கேள்வி எழுப்பி இருந்தார்கள்.
    • நற்கீரன் - ஆமாம். தமிழ் விக்கியில் support system உருவாக்குவதை தமிழ் விக்கிச் சமூகத்தோடு சேர்து செய்ய வேண்டும்.
    • நற்கீரன் - நாம் execution நோக்கிச் சிந்திக்கத் தொடங்கலாம். தமிழினி மலையகத்தில், கிழக்கு/தென்கிழக்கில் சிவகுமார், பேரா. பாலசுந்தரம், சஞ்சயன் ஆகியோர் தொடர்புகளை ஏற்படுத்தி தருவார்கள். வடக்கில் மன்னார், வன்னி, வவுனியாவில் நாம் செயற்திட்டங்களை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
    • கோபி - பல்லூடகங்கள் உருவாக்குவது செய்யலாம். கட்டுரைகள் எழுதுவது சிக்கலாக இருக்கலாம். தமிழ் விக்கிச் சமூகத்தை engage செய்ய வேண்டும்.
    • மயூரநாதன் - 250 கட்டுரை இலகுகள் அவ்வளவு கடினம் இல்லை. நாம் முயன்றால் முடியும்.
    • நற்கீரன் - மயூரநாதன் இது தொடர்பான உசாத்துனை நூல்களைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்ததா.
    • மயூர்நாதன் - நூல்களாகப் பெற முடியவில்லை. என்னிடம் ஏற்கனவே தொடர்புடையவை இல்லை. நிறைய அறிக்கைகள் உள்ளன.
    • சுதர்சன் - பழைய ஒளிவீச்சுக்களில் முத்துக்குளித்தல், மீன்பிடித்தல் போன்ற தொழிற்கலைகளைப் பற்றி பதிவுகள் உள்ளன.
    • மயூரநாதன் - எல்லாரும் சேர்ந்து பணி புரிந்தாலே சிறப்பாகச் செயற்படலாம்.
    • நற்கீரன் - சிறீகாந்தலட்சுமி, நீங்கள் trades crafts பற்றி ஆவணப்படுத்தல் அனுபவம் உண்டா.
    • சிறீகாந்தலட்சுமி - ஆமாம். கொஞ்சம் ஆவணப்படுத்தி உள்ளேன். school exhibition கைத்தொழிலகள் சார்ந்து அவற்றை material சார்ந்து வகைப்படுத்தும் பணியில் ஈடுபட்டேன். 2008 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபையில் public library சார்பாக ஒரு exhibition செய்தோம். உங்கள் உசாத்துணைப் பட்டியலில் இவற்றை சேர்க்க முடியும் என்றால் சேர்க்கிறேன். shell crafts செய்யும் பெண்கள் பற்றி அறிவேன். இவர்களை நேர்காணல் செய்ய முடியும். ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழகம் on course ? என்ற பெயரில் சிறு தொழில் செய்பவர்களைக் கூப்பிட்டு ஒரு exhibition செய்து, அவர்களின் சந்திப்படுத்தலுக்கு உதவுவார்கள். எல்லா base material சார்ந்தவர்களும் வருவார்கள். கச்சேரிக்குக் கீழே தொழில் திணைக் களம் உள்ளது. அங்கேயும் தகவல் திரட்ட முடியும். ஆணைக் கோட்டையில் மண் சார்ந்த பொருட்கள் செய்யப்படுகின்றன. தர்மபுரத்திலும் (பானை வனைதல்) உண்டு. வாழை நார் சார்ந்து நீர்வேலியில் உண்டு. என்னிடம் சிறு சேகரிப்பு உண்டு. base material சார்ந்து என்னிடம் சில links உள்ளன.
    • சிறீகாந்தலட்சுமி - ஒரு எடுத்துக்காட்டை செய்து காட்டினால். மாணவர்களை ஈடுபடுத்தி இந்த ஆவணப்படுத்தலைச் செய்ய முடியும். அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
    • நற்கீரன் - கட்டயாம் இவற்றை ஆவணப்படுத்த முடியும்.உங்களிடம் உள்ள பகிரப்படக்கூடிய ஆவணங்களை தயந்து பகிரவும்.
    • மயூர்நாதன் - பல கலைகளுக்கு சங்கங்கள் உண்டு. அவர்களையும் தொடர்பு கொண்டு ஈடுபடுத்த வேண்டும்.
    • சிறீகாந்தலட்சுமி - அருமையான பொருட்களை உருவாக்கிறார்கள். Finish is fantastic. சந்திப்படுத்தலுக்கு சிறு அளவினாலும் உதவி செய்யக் கூடியதாக இருந்தால் நன்று.
    • சிவகுமார் - கிழக்கைப் பொறுத வரையில் பல இடங்களில் மண்பாண்டத் தொழிற்சாலையும் கைத்தறி நெசவும் பரவலாகக் காணப்படுகிறது. மயூரநாதன் சொன்னது போல சங்கங்களையும், தொழில் அமைச்சுக் கீழே பதிவுகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும். தொழில் அமைச்சில் சங்கங்கள் register செய்து இருப்பார்கள். இவற்றைப் பயன்படுத்தி எங்கே எங்கே தொழில்கள் உள்ளன என்று அறியலாம். கல்முனையில் நல்ல கைத்தறிப் பொருட்கள் கிடைக்கின்றன. கைத்தொழில் இருந்தான் கொழும்புக்கு பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
    • சிறீகாந்தலட்சுமி - வன்னியில் பிரம்பும்/bamboo? செய்யும் பல குடும்பங்கள் இருந்தன. வன்னியில இந்தத் தாவரங்கள் வளரும். ஆச்சியரியமாக இருந்தது.
    • பத்மாநபஐயர் - 16வது இலக்கியச் சந்திப்பு (93) மலரில் நெதர்லாந்தில் இருந்து வெளிவந்த இதழ்கள், பிரான்சில் இருந்து வெளிவந்த இதழ்கள் பற்றிய கட்டுரைகள் உண்டு அவற்றைப் பயன்படுத்தலாம்.
    • சுதர்சன் - கலைச்சொல்வன் அவர்கள் பின்னர் ஒரு விரிவான கட்டுரை வெளியிட்டுள்ளார்.

Agenda

  • Welcome back to Shaseevan and Thiruvarangan - All - 10 mins
  • Last Meeting Action Items Review - Sutharsan - 10 mins
  • Backup plans for Minutes taker - 5 Minutes
  • April 2017 - Program Report Review - Gajani - 15 mins
  • April 2017 - Financial Report Review - Gajani - 10 mins
  • Resource Mobilization Update - Gopi - 15 mins
  • Human Resources Sub Committee Update - Seran - 20 mins
  • Project Update - Tamil Wikipedia - Noolaham Foundation Crafts and Trades - Natkeeran - 5 mins
  • Project Update - Encyclopedia of Sri Lankan Tamil Periodicals - Mayooranthan - 5 mins