Women Archive - noolahamfoundation/projects GitHub Wiki

Table of Contents

NF : Project : Women Archive

Title NF Women Archive
Document Type Project
Security Classification BOD, RB, Management
Department NF Program
Author (s)
Version Initial Draft -

ஆவணத்தின் நோக்கம்

நூலக நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் நிறுவனத்தின் சேகர அபிவிருத்திச் செயற்பாட்டின் ஒரு செயற்பாடான மலையக ஆவணப்படுத்தலின் அறிமுகம்

பயனாளர்கள்

தகவற் சேவைகள் அணி, ஊழியர்கள், தன்னார்வலர்கள்

பின்புலம்

நூலக நிறுவனமானது இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான எல்லா வகையான அறிவுத் தொகுதிகளையும் ஆவணப்படுத்தி எண்ணிம வகையில் பாதுகாத்து அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபடும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும். சாதி, சமய, இனக் கட்டமைப்புக்கள், சமூகத்தில் நிலவிய ஆணாதிக்க செல்வாக்குக்கள், குடியேற்றவாத ஆட்சி போன்ற பல்வேறு காரணங்களால் பல்வேறு அறிவுத் தொகுதிகள் ஆவணப்படுத்தப்படவில்லை பேணப்படவில்லை. அண்மைக்காலத்தில் இடம் பெற்ற உள்நாட்டு யுத்தம், நவீன மயமாக்கம், போதிய அளவு விழிப்புண்ர்வு இன்மை போன்றவற்றாலும் பெறுமதிமிக்க அறிவு வளங்கள் இழக்கப்பட்டுள்ளன.

ஆவணப்படுத்தல், ஆவணகப்படுத்தல், அணுக்கப்படுத்தல் ஒரு சமூகத்தோடு நெருங்கிய தொடர்புடைய பணிகள் ஆகும். சமூகத்தில் இருக்கக் கூடிய அரசியல், அதிகார, பண்பாட்டு சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, முற்போக்கான ஒரு சட்டகத்தின் தனது பணிகளை முன்னெடுக்க நூலக நிறுவனம் உறுதிபூண்டுள்ளது. அந்த வகையில் கூடிய அழிவாபத்துக்கு உட்பட்ட, போதிய கவனிப்புக்கள் பெறாத, சமூகச் சூழ்நிலைகளால் புறக்கணிக்கப்பட்ட சேகரங்கள் தொடர்பாக நூலக நிறுவனம் சிறப்புச் செயற்திட்டங்களை வடிவமைத்து முன்னெடுத்து வருகின்றது. அவற்றில் ஒன்று பெண்கள் ஆவணகம் ஆகும்.

நோக்கங்கள்

  • இலங்கைத் தமிழ் பேசும் பெண்களின், பெண்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அடையாளம் காணல், எண்ணிம வகையில் பாதுகாத்தல், கட்டற்று அணுக்கம் தருதல்.
  • இலங்கைத் தமிழ் பேசும் பெண்களின் கற்றல் செயற்பாடுகளுக்கான வளங்களை, சேவைகளை வழங்குதல்.
  • இலங்கைத் தமிழ் பேசும் பெண்களின் ஆவணப்படுத்தல், ஆவணகப்படுத்தல் பணிகளுக்கு உதவுதல், ஊக்கப்படுத்தல்
  • ஆவணப்படுத்தல், ஆவணகப்படுத்தல் பணிகள் ஊடாக இச் செயற்பாடுகளில் உள்ள தடைகளை, வாய்ப்புக்களை, அனுபவங்களை, கற்றல்களைப் பகிர்தல்.

இலக்குகளும், உயர்படி நிலைகளும்

<<>>

செயற்பாடுகள்

பட்டியலாக்கமும் வளங்களைக் கண்டடைதலும் (Cataloging and Source Identification):

இலங்கைத் தமிழ் பேசும் பெண்களின், பெண்கள் தொடர்பான ஆவணங்களை சீர்தரங்களுக்கு ஏற்ப பட்டியல் ஆக்கம் செய்தல். ஏற்கன்வே உள்ள பட்டியல்களில் இருந்தும், படைப்பாளிகள், சேகரிப்பாளர்கள், ஆய்வாளர்களின் உள்ளீடுகள் பெற்றும் ஒரு முழுமையான பட்டியாலி உருவாக்க வேண்டும். பல்லூடக, தனிப்பட்ட சேகரிப்புக்கள் உட்பட்ட படைப்புக்களை, ஆவணங்களை இவ்வாறு பட்டியல்படுத்த வேண்டும்.

Collections Development and Rights Management

பட்டியலாக்கப்பட்ட படைப்புக்களை சேகரித்தல். அவற்றை அணுக்கப்படுத்துவதற்கான உரிமைகளைப் பெறுதல்.

அணுக்கப்படுத்தல், வெளியீடுகள்

எண்ணிமப்படுத்தல், எண்ணிமப் பாதுகாப்பு

பெண்கள் ஆவண வளங்களுக்கு priority கொடுத்து எண்ணிமப்படுத்தல், எண்ணிம வழியில் பாதுகாத்தல்.

சம காலப் படைப்புக்களை ஆவணப்படுத்தல்

தற்போது வெளிவரும் படைப்புக்களை ஆவணப்படுத்தவதற்கான வாய்ப்புக்களை நாம் ஆய வேண்டும். முதலில் தற்போது வெளிவரும் இதழ்கள், படைப்புக்களை நாம் பெற்று ஆவணப்படுத்த வேண்டும். இவற்றை sheet feed scanners கொண்டு எண்ணிமப்படுத்த முடியும். அடுத்தது நடைபெறும் கூட்டங்களை, நிகழ்வுகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் தொடர்பாக ஆய்தல்.

படைப்பாளிகள்/ஆளுமைகள்/நபர்கள், அமைப்புகள் தரவுத்தளங்கள்

பட்டியலாக்கம் போன்றே, நாம் பெண் எழுத்தாளர்கள், கலைஞர்கள், தொழிற்கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் எனப் பல்துறையினரை, பல்வகைப்பட்டவர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டுதல். இது எமது Biography Database செயற்திட்டதோடு முன்னெடுக்கப்படலாம். இவ்வாறு அடையாளம் காணப்படும் நபர்கள் ஊடாக அவர்களைப் பற்றிய ஆவணங்கள் திரட்டப்படலாம். இதே போன்று பெண்கள் அமைப்புகளின் தகவல்கள் திரட்டப்பட வேண்டும்.

Training, Engagement, Partnerships with Women's Organizations

பெண்கள் ஆவண மாநாடு, கருத்தரங்கு

தற்போதைய தகவல்

மூல ஆவணம்

https://docs.google.com/document/d/1lvwuCtwmCFR8-FVbJnk01L50qne5CDjXMj74ImRFamg/edit?usp=sharing


⚠️ **GitHub.com Fallback** ⚠️